ADDED : ஏப் 03, 2026 10:53 PM

பெண்ணாடம்: பெண்ணாடம் பள்ளிவாசலில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெண்ணாடம், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதி வேட்பாளர் முருகுமாறன் நிர்வாகிகளிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது, பள்ளிவாசல் தலைவர் சிராஜ் அலி, நிர்வாக குழு உறுப்பினர் பாபு, நிர்வாகிகள் உம்ரான், ரபி, காசிம், மொய்தீன், அ.தி.மு.க., வர்த்தகரணி மாநில துணை செயலாளர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் முத்தமிழ்ச்செல்வன், பெண்ணாடம் அ.தி.மு.க., நகர செயலர் மதியழகன், நகர ஜெ., பேரவை செயலாளர் சேகர், அவைத் தலைவர் கணேசன், துணை செயலர் சரவணன், அண்ணா தொழிற் சங்க மாவட்ட இணை செயலர் மதிகோபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட இணை செயலர் கவி சங்கர், தகவல் தொழில்நுட்ப அணி நகர செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
