ADDED : ஏப் 05, 2026 05:55 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு வீரர்களை சந்தித்து அ.தி.மு.க,, வேட்பாளர் அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித்தார். இந்த நிகழ்விற்கு, நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணைசெயலாளர் இளஞ்செழியன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர்கள் பாலமுருகன், அருளழகன், மாவட்ட பேரவை துணை செயலாளர் வீரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து ராஜாமணிவண்ணன் வரவேற்றார். புவனகிரி தொகுதி வேட்பாளர் அருண்மொழிதேவன் விளையாட்டு வீரர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
என்.எல்,சி., நிறுவனத்தின், சேத்தியாத்தோப்பு கிழக்குப்பகுதி நிலக்கரி திட்டத்தை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சர்க்கரை ஆலையில் 3.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்த நிலையில், இந்தாண்டு தி.மு.க. ஆட்சியில் வெறும் 31 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்து நலிவடைந்து வருகிறது.
ஒரு ஆலை நிர்வாகத்தை கூட நிர்வகிக்க முடியாத, தி.மு.க, அரசு எப்படி மக்களை பாதுகாக்கும்?
இளைஞர்கள் நன்கு புரிந்து சட்டசபை தேர்தலில் பாடம் புகட்ட இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டளித்து வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
:
