ADDED : ஏப் 07, 2026 05:35 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நேற்று சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வேளங்கிராயன் பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னுார், கரிக்குப்பம், தோப்பிருப்பு, கொத்தட்டை, பஞ்சங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரித்தார். அவருடன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் அர்ச்சனா ஈஸ்வர், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் ராகேஷ், ஒன்றிய தலைவர் சுரேஷ், கொத்தட்டை ஊராட்சி முன்னாள் துணை தலைவர் விஜயராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய மீனவரணி செயலாளர் சிவக்குமார், பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் முருகன், நகர செயலாளர் அஜீத், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் ராகேஷ், ஒன்றிய தலைவர் சுரேஷ், த.மா.கா., மாவட்ட தலைவர் ரஜினிகாந்த், நகர தலைவர் நாகராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
