ADDED : ஏப் 09, 2026 06:04 AM

பெண்ணாடம்: நல்லுார் தெற்கு ஒன்றிய கிராம மக்களிடம் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் ஓட்டு சேகரித்தார்.
திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர் முருகுமாறன் போட்டியிடுகிறார். இந்நிலையில், நேற்று அவர் மாளிகைக்கோட்டம், இருளம்பட்டு, சின்ன கொசப்பள்ளம், பெரிய கொசப்பள்ளம், துறையூர், முருகன்குடி, கிளிமங்கலம், குறுக்கத்தஞ்சேரி, மோசட்டை, கணபதிகுறிச்சி, பெலாந்துறை, பாசிக்குளம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, அரியராவி, பெ.பூவனுார், காரையூர், வெண்கரும்பூர், நந்தப்பாடி, தாழநல்லுார், நரசிங்கமங்கலம், கோவிலுார், சிறுமங்கலம், மதுரவல்லி, சேவூர் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ் அழகன், பா.ம.க., மாவட்ட தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் சக்திவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்துராமன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அருள், நிர்வாகிகள் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ராஜேந்திரன், மாளிகைக்கோட்டம் சுந்தரம், குணாளன், அர்ச்சுணன், ராயதுரை, பா.ம.க., ரமேஷ் உடனிருந்தனர்.
