தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு  

 அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு  

 அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு  


ADDED : ஏப் 09, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: புவனகிரி தொகுதிக்குட்பட்ட, கிழக்கு ஒன்றிய கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித்தார்.

நேற்று புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பு.சித்தேரி, மேலமணக்குடி, சாத்தப்பாடி, வடக்குதிட்டை, தெற்குதிட்டை, மணவெளி, ஜெயங்கொண்டான், எல்லைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர், கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார். தெற்கு திட்டை கிராமத்தில் ஓட்டு சேகரித்த போது அவர் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று, 72 ஆண்டுகளை கடந்த பிறகு தமிழகத்தின் ஒட்டு மொத்த கடன் ரூ. 4.50 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால் தி.மு.க, ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் வாங்கிய கடன், 6.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகம் தற்போது, 11 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் நிலையில் வாங்கிய கடனில் மக்களுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இளைர்கள் மது, கஞ்சா போன்ற போதை பழக்கங்களால் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க.. ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் ஆண்டவர்செல்வம், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாணவரணி ராஜேஷ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர்,, பொறுப்பாளர் வீரமூர்த்தி, பா.ம.க. ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், சம்பத், பா.ஜ.க., ஒன்றிய தலைவர் லட்சுமிநரசிம்மன், முன்னாள் மாநில துணை தலைவர் வெற்றிவேல், த.மா..க., நிர்வாகிகள் கலைவாணன், பழனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us