ADDED : ஏப் 13, 2026 03:53 AM

மந்தாரக்குப்பம்: கம்மபுரம் ஒன்றிய கிராமங்களில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட் டு சேகரித்தார்.
புவனகிரி தொகுதி வீணங்கேனி, செங்கால்பாளையம், சீராங்குப்பம், தெற்கு சேப்ளாநத்தம் தெற்கு, கோட்டகம், உய்யக்கொண்டராவி, வடக்கு சேப்ளாநத்தம், கீழ்பாதி, குறவன்குப்பம், பெரியாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித் தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அங்கு அருண்மொழிதேவன் பேசுகையில், 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்,' என்றார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜ்மோகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சின்ன ரகுராமன், பா.ஜ., ஒன்றிய தலைவர் சின்னதுரை, பா.ம.க., ஒன்றிய செயலாளர் பழனிவேல், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பிரியதர்ஷன், மாநில இளைஞரணி துணை தலைவர் செந்தில் குமார், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
