ADDED : ஏப் 15, 2026 10:42 PM

வடலுார்: நெய்வேலி பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
நெய்வேலி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சொரத்துார் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர்,
ஆண்டிக்குப்பம், பணிக்கன்குப்பம், புதுபிள்ளையார்குப்பம், நடுபிள்ளையார்குப்பம், பழைய பிள்ளையார்குப்பம், மாளிகம்பட்டு, சின்ன காட்டுப்பாளையம், நடுக்காட்டுப்பாளையம், பெரிய காட்டுப்பாளையம், வேலங்குப்பம், காட்டாண்டிக்குப்பம், மேட்டுக்குப்பம், ஆத்திரிகுப்பம், குடியிருப்பு, அண்ணங்காரன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்து, பிரசாரம் செய்தார்.
அவருடன் தேர்தல் தொகுதி பொறுப்பாளர் சிவசுப்பிரமணியம், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், பா.ம.க., மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பா.ஜ., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, த.மா.க., மாவட்ட தலைவர் ஜோதிமணி, பா.ஜ., பிரசார பிரிவு மாவட்ட ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
