ADDED : ஏப் 15, 2026 10:42 PM

சேத்தியாத்தோப்பு: புவனகிரி தொகுதிக்குட்பட்ட கீரப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் மதுராந்தகநல்லுார், பாளையஞ்சேர்ந்தங்குடி, பூந்தோட்டம், வாக்கூர், வடப்பாக்கம், ஓடாக்கநல்லுார் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்மொழிதேவன் ஓட்டு சேகரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கான திட்டங்கள் அனைத்தும் கனவாகி உரம், மருந்துகள், பால், மளிகை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தாமல் மக்கள் படாத பாடுபட்டு துன்புறுகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல்வே திட்டங்களில், 'ஸ்டிக்கர்' ஓட்டிக்கொண்டனர். தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட உயர் ரக போதை வஸ்துக்களால் இளைஞர்கள், சிறுவர்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தாய், தந்தையருக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலை மாற இரட்டை இலை சின்னத்திற்கு, ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கனக சிகாமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் கருப்பன், துணை செயலாளர் சுனிதாபாரதி, பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
