ADDED : ஏப் 15, 2026 10:49 PM

திட்டக்குடி:திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட, சிறுபாக்கம் அடுத்த எஸ்.புதுார், அரசங்குடி, எஸ்.நரையூர், வ.குடிக்காடு, ராயர்பாளையம், வி.புதுார், ஒரங்கூர், பட்டாக்குறிச்சி, வ.மேட்டூர், க.குடிக்காட, வள்ளிமதுரம், பனையாந்துார், சித்தேரி, வடபாதி உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு, சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது அவர், தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல நல்ல திட்டங்கள் உள்ளதாகவும் கூறி, கிராம மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து, 'நான் வெற்றி பெற்றால் மங்களூர் ஒன்றியத்தை முதன்மை ஒன்றியமாக மாற்றுவேன். கிராம மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்து, மக்கள் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்' என்றார்.
ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஜெ.பேரவை செயலர் செந்தில், மாநில வர்த்தக அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட வர்த்தக அணி அருள், மாவட்ட பொருளாளர் அய்யாசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
