ADDED : ஏப் 15, 2026 10:52 PM

சேத்தியாத்தோப்பு: புவனகிரி தொகுதி அ.தி.மு.க., கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியத்தில் தேவன்குடி, அய்யனுார், அக்கராமங்கலம், சிறுகாலுார், விளாகம், சேதியூர், தரசூர், நார்த்தங்குடி, டி.மணலுார், டி.நெடுஞ்சேரி, பெருங்காலுார், முகையூர் கோடியாளம், எசனை உள்ளிட்ட பகுதிகளில், வேட்பாளர் அருண்மொழிதேவன் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அருண்மொழிதேவன் பேசியதாவது:
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்பிற்காக, வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லுாரிகளையும் திறந்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி தான். கடந்த தி.மு.க., கூடுதலாக ஒரு அரசு மருத்துவக்கல்லுாரியை கூட உருவாக்கவில்லை.
பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பொய் பிரசாரம் செய்து ஓட்டுகளை பெற திட்டமிட்டுள்ள தி.மு.க, விடம் ஏமாறாதீர்கள். இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து என்னை வெற்றி செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கனகசிகாமணி, ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
