ADDED : நவ 22, 2025 05:44 AM

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க,. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், சிதம்பரத்தில் நடந்தது.
மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் சுந்தர், துணைசெயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
சிதம்பரம் நகர செய லாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஜெயபால் பங்கேற்று ஆலோ சனை வழங்கினர்.
இதில் பாண்டியன் எம்.எல்.ஏ.,பேசுகையில், 'சிதம்பரம் சட்டசபை தொகுதியில், 260; காட்டுமன்னார்கோவில் தொகுதியில், 255; ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தகுதியான வாக்காளர்கள் அனைவரும் பட்டியலில் இடம்பெற முகவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்,' என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, அசோகன், பேராசிரியர் ரங்கசாமி, பாலகிருஷ்ணன், முருகையன், சிவக்குமார், ஜோதிபிரகாஷ், நவநீதகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் எம்.ஜி.ஆர்.தாசன், பூமாலை கேசவன், தமிழரசன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

