/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 09, 2025 11:34 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் புவனகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குறுக்குரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், எம்.ஜி.ஆர்., ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு, இளைஞரணி மாவட்ட இணைசெயலாளர் நன்மாறன், புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், மகளிரணி இந்திராகணேசன், பிரித்திவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகி ஜெயசீலன் வரவேற்றார்.
கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்,ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து சிறப்புரையாற்றினார்.ஒன்றிய நிர்வாகிகள் கார்த்தி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஜெ.,பேரவை ஒன்றிய செயலாளர் ராஜாசாமி நாதன் நன்றி கூறினார்.