/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம்; மாஜி., அமைச்சர்கள் பங்கேற்பு
/
அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம்; மாஜி., அமைச்சர்கள் பங்கேற்பு
அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம்; மாஜி., அமைச்சர்கள் பங்கேற்பு
அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டம்; மாஜி., அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : நவ 18, 2024 07:53 PM

கடலுார்; கடலுாரில், வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அனைத்து நிலை அமைப்புகளின் செயல்பாடுகளை நேரடியாக கள ஆய்வு செய்து அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்த கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சண்முகம், அப்துல் ரஹீம் ஆகியோர் கட்சிப் பணிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர்.
தமிழகத்தில் மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர், வீட்டு வரி, பத்திரப் பதிவு கட்டணம் உயர்த்திய தி.மு.க., அரசை அகற்றி அ.தி.மு.க, மீண்டும் ஆட்சி அமைய சபதம் ஏற்பது. கடலுார் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடலுார், பண்ருட்டி சட்டசபை தொகுதிகளில் 2026 சட்டசபை தேர்தலில் சிறப்பாக களப்பணியாற்றி வெற்றி பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குமார், மாநில மீனவரணி தங்கமணி, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், மருத்துவரணி சீனுவாசராஜா,அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம், ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், வழக்கறிஞரணி செயலாளர் மாசிலாமணி, பகுதி செயலாளர்கள் மாதவன், கந்தன், பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.