/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
/
அ.தி.மு.க., பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : செப் 15, 2025 02:21 AM

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் இன்று நடக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை :
கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று (15ம் தேதி) மாலை 6:00 மணிக்கு மந்தாரக்குப்பம் கடைவீதியில் நடக்கிறது. அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், தலைமை கழக பேச்சாளர்கள் சுகுமார், சுந்தரம் பேசுகின்றனர்.
பொதுக் கூட்டத்தில், மாநில, மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரிதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க பிரிதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.