ADDED : மார் 01, 2026 05:20 AM

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார் பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிதம்பரம், போல்நாராயணன் பிள்ளை தெருவில் நடந்தது. மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் குமார் வரவேற்றார். நகர செயலாளர் செந்தில்குமார், நகர ஜெ., பேரவை செயலாளர் சுரேஷ் பாபு, மாவட்ட பொருளாளர் சுந்தர், இணைச் செயலா ளர்கள் ரங்கம்மாள், செல்வம், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர்கள் துரை செந்தில், முருகுமாறன், தலைமை பேச்சாளர் திலீபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாரிமுத்து, தேன்மொழி, சிங்காரவேல், கர்ணா, சுந்தரமூர்த்தி, அசோகன், ரங்கசாமி, பாலகிருஷ்ணன், சிவகுமார், வாசு முருகையன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கூட்டத்தில் 10 பெண்களுக்கு தையல் மெஷின், 5 பேருக்கு சலவைப் பெட்டி, 15 விவசாயிகளுக்கு ஸ்பிரேயர் மற்றும் 1000 பேருக்கு புடவை ஆகியவை வழங்கப்பட்டன.
மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
