/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயிகளுக்கான கட்சி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
/
விவசாயிகளுக்கான கட்சி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
விவசாயிகளுக்கான கட்சி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
விவசாயிகளுக்கான கட்சி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேச்சு
ADDED : ஜூலை 18, 2025 12:45 AM

சேத்தியாத்தோப்பு:விவசாயிகளுக்கான கட்சி அ.தி.மு.க., என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
சேத்தியாத்தோப்பில் நடந்த 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
நாட்டிற்கு உணவளிக்கும் உன்னதமான தொழிலை மேற்கொள்ளும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தெய்வமாக பார்க்கிறேன். காரணம் நானும் ஒரு விவசாயி. அ.தி.மு.க, என்றைக்கும் விவசாயிகளுக்கான கட்சியாகும்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2 லட்சத்து 50 டன் கரும்பு அரவை செய்தது. ஆனால், தற்போது, 35 ஆயிரம் டன் கரும்பு அரவையை தாண்டவில்லை. அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு மூலம் கொள்முதல் நடந்து வருகிறது.
ஆனால் எந்த விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய முடியும். 2026 தேர்தலில் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறை இன்றி விவசாயிகள் எளிதாக நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கோரிக்கையின்படி வெள்ளாற்றில் வெள்ளம் உட்புகாதவாறு சக்திவிளாகத்தில் வெள்ளதடுப்பு சுவர், கள்ளிப்பாடி காவனுார் இடையே தடுப்பணை, கே.பவழங்குடியில் தடுப்பணை கட்டப்பட்டது.
புவனகிரி, ஒரத்துார் அரசு மருத்துவமனைகளில் 30 படுக்கை வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., மாநில தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன், இளைஞரணி செயலாளர் கிருபாகரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில துணை செயலாளர் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், முனுசாமி, சீனிவாசன், விநாயகமூர்த்தி, கருப்பன், சின்னரகுராமன், நவநீதகிருஷ்ணன், பேரூராட்சி செயலாளர்கள் செல்வக்குமார், மணிகண்டன், மனோகரன், பாலசுந்தரம், சார்பு அணி நிர்வாகிகள் கனகசிகாமணி, உமாமகேஸ்வரன், வீரமூர்த்தி, ராஜாசாமிநாதன், அன்புவேல், பாஸ்கரன், திருநாவுக்கரசு, வீராசாமி, கொளஞ்சிநாதன், கமலக்கண்ணன், பிரித்திவி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

