/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள்; நலத்திட்ட உதவி
/
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள்; நலத்திட்ட உதவி
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள்; நலத்திட்ட உதவி
அ.ம.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள்; நலத்திட்ட உதவி
ADDED : டிச 14, 2024 05:59 AM

கடலுார் : கடலுாரில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவந்திபுரம் தேவநாத சுவாமி மற்றும் விலங்கல்பட்டு கோவில்களில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எம்.பி., அகரம் கிராமத்தில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் சத்தியராஜ், சிவக்குமார், மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி, இணை செயலாளர் உமா, துணை செயலாளர்கள் வேல்முருகன், சிவகாமி, கல்யாணராமன், பகுதி செயலாளர்கள் காதர், தீபா, சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.