தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., ஆலோனைக்கூட்டம்

 அ.தி.மு.க., ஆலோனைக்கூட்டம்

 அ.தி.மு.க., ஆலோனைக்கூட்டம்


ADDED : பிப் 22, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அ.தி.மு.க., வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கடலுார், பண்ருட்டி தொகுதிகளின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கடலுாரில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார்.

முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாநில மீனவர் அணி தங்கமணி, மருத்துவ பிரிவு சீனுவாசராஜா, சுப்பிரமணியன், துணை செயலாளர் ஆறுமுகம், காசிநாதன் முன்னிலை வகித்தனர்.

இதில், மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ.,வின், 78வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வரும் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில் சம்பத் பேசுகையில், ' ஜெ., பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி முன்னாள் முதல்வர் பழனிசாமியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும், ' என்றனர். இதில் ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், கந்தன், தங்க வினோத் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், ராமசாமி, தமிழ்ச்செல்வன், சிவபூஷணம், நகர செயலாளர்கள் மோகன், சேகர், பேரூர் செயலாளர் அர்ஜுனன், சுரேஷ், கடலுார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us