தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அடிப்படை வசதி குறைகளுக்கு தீர்வு :அ.தி.மு.க., முருகுமாறன் வாக்குறுதி

 அடிப்படை வசதி குறைகளுக்கு தீர்வு :அ.தி.மு.க., முருகுமாறன் வாக்குறுதி

 அடிப்படை வசதி குறைகளுக்கு தீர்வு :அ.தி.மு.க., முருகுமாறன் வாக்குறுதி


ADDED : ஏப் 17, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநத்தம்: 100 நாட்களில் தொகுதி முழுவதும் அடிப்படை வசதி குறைகள் தீர்க்கப்படும் என அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் வாக்குறுதி அளித்தார்.

திட்டக்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், மங்களூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆவட்டி குடிகாடு கிராம மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

அவருக்கு, கிராம மக்கள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அங்கு அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் பேசியதாவது:

திட்டக்குடி தொகுதியில் உள்ள கிராமங்கள் தோறும் அடிப்படை வசதிகள் கூட இன்றி பின்தங்கியுள்ளன.

தேர்தலில் நான் வெற்றி பெற்றதும், அடுத்த, 100 நாட்களில் தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகளில் உள்ள குறைகள் முழுவதும் தீர்க்கப்படும்.

மேலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும், திட்டக்குடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, அ.தி.மு.க., மங்களூர் மேற்கு ஒன்றிய செயலர் பாண்டியன், வர்த்தகரணி மாநில துணை செயலர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் முத்தமிழ்செல்வன், வர்த்தகரணி மாவட்ட செயலர் அருள், அ.தி.மு.க., நிர்வாகி, தமிழ்செல்வன், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us