/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு பா.ஜ., குறி :தேர்தலுக்கு தயாரான அ.தி.மு.க.,வினர் 'ஷாக்'
/
மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு பா.ஜ., குறி :தேர்தலுக்கு தயாரான அ.தி.மு.க.,வினர் 'ஷாக்'
மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு பா.ஜ., குறி :தேர்தலுக்கு தயாரான அ.தி.மு.க.,வினர் 'ஷாக்'
மாவட்டத்தில் 3 தொகுதிகளுக்கு பா.ஜ., குறி :தேர்தலுக்கு தயாரான அ.தி.மு.க.,வினர் 'ஷாக்'
ADDED : டிச 31, 2025 03:10 AM
மா வட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் உட்பட, 9 சட்டசபை தொகுதிகளும் முக்கியமானவை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், 7 தொகுதிகளிலும்; சிதம்பரம், புவனகிரி தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களும் நேரடியாக வெற்றி பெற்றனர்.
'வாழ்வா சாவா' என்ற நிலையில் தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தோல்விக்கு, பா.ஜ., கூட்டணியே காரணம் என அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் விலகாத நிலையில், அ.தி.மு.க., கடந்த தேர்தலை போல பா.ஜ.,வுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட சில கட்சிகளையும் கூட்டணியில் இணைக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
சமீபத்தில், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியலை அ.தி.மு.க., தலைமையிடம் வழங்கியதாகவும், அதில் 234 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக 50 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதில், திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு பா.ஜ., குறி வைத்துள்ளது. அதன்படி, மூன்று தொகுதிகளிலும் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் தேர்தலுக்கு தேவையான 'வைட்டமின் ப' உட்பட பல சவால்களை சந்திக்க தயாராகி வருகின்றனர்.
ஆனால், திட்டக்குடி தொகுதியில் கடந்தமுறை போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் தோல்வியடைந்து, தற்போதைய அமைச்சர் கணேசன் வெற்றி பெற்றார். விருத்தாசலத்தில் பா.ம.க., வேட்பாளர் தோல்வியடைந்து காங்., ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். சிதம்பரத்தில் அ.தி.மு.க., பாண்டியன் வெற்றி பெற்றார்.
இருப்பினும், மூன்று தொகுதிகளையும் பா.ஜ., விடாப்பிடியாக கேட்பதால், அக்கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏ., வெற்றி பெற்ற சிதம்பரம் மற்றும் பா.ம.க., போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியை கேட்பதால், இவ்விரு கட்சி நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர்.
தமிழக கூட்டணிக்கு அ.தி.மு.க.,வே தலைமை தாங்கும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறிவிட்ட நிலையில், மாநில பா.ஜ.,வினர் விடாப்பிடியாக மூன்று தொகுதிளையும் கேட்டு வருகின்றனர். இது, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட தயாராகி வரும் மூத்த நிர்வாகிகள், முக்கிய புள்ளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

