/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
/
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
முன்னாள் எம்.எல்.ஏ., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
ADDED : நவ 07, 2025 12:52 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக் கரையில், முன்னாள் எம்.எல்.ஏ., அரங்கநாதன் 13ம் ஆண்டு நினைவு தினம் அ.தி.மு.க., சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இதில், மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, அவரது உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இதில், மாநில தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் கிருபாகரன், மாநில வர்த்தகர் பிரிவு துணை செயலர் சக்திவேல், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலர் ரமேஷ், கல்யாணி அரங்கநாதன், முன்னாள் பால்வளத் தலைவர் வேங்கடவேணு, கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மாவட்ட இளைஞரணி இணை செயலர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலர் குறிஞ்சி செல்வன், மாவட்ட கலை பிரிவு செயலர் சவுந்தர், நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், ரஜினி, சுரேஷ், வினோத்குமார், தமிழரசன், மணி, ராஜன் மற்றும் அ.தி.மு.க., வினர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, அரங்கநாதன் உருவ படத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

