/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.ம.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
அ.ம.மு.க.,வினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : அக் 05, 2025 03:18 AM

சிதம்பரம் : சிதம்பரத்தில் அ.ம.மு.க., வினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
சிதம்பரத்தில் மேற்கு மாவட்ட அ.ம.மு.க., முன்னாள் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில், நிர்வாகிகள் மோகன்தாஸ், இளையராஜா, திருநீலகண்டன், திரிபுரசுந்தரி, பிரபு, சீனிவாசன், தங்கமணி உட்பட 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
மாவட்ட அவைத் தலைவர் குமார், இணை செயலாளர் ரெங்கம்மாள், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செழியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் உட்பட பலர் உடனிருந்தனர்.