ADDED : பிப் 14, 2026 03:57 AM

கடலுார்: தி.மு.க., அரசை கண்டித்து, கடலுார் வடக்கு மாவட்டம் சார்பாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
கடலுார் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார், மாநில மீனவரணி இணை செயலாளர் தங்கமணி, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைசெயலாளர் சுப்பிரமணியன், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் அழகானந்தம், மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்து கிருஷ்னண், தேர்தல் பணி குழுத்தலைவர் தாமரை கண்ணன், பா.ஜ., கடலுார் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, அ.ம.மு.க., ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கடலுார் வட்டாரத் தலைவர் குமாரசாமி, மாநகர பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், மாதவன், கந்தன், தங்க வினோத் ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி, விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பிரித்விராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
