ADDED : பிப் 12, 2026 04:01 AM

விருத்தாசலம்: 'அ.தி.மு.க., சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற் க வேண்டும்' என மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது 100 நாள் வேலை திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், இத்திட்டம் பேரூராட்சிகளு க்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்த தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தி அறிவித்துள்ள திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே, தவறான பிரசாரம் செய்து வரும், தி.மு.க., அரசை கண்டித்து, நாளை (13ம் தேதி) கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மங்களூர், நல்லுார், விருத்தாசலம், கம்மாபுரம், புவனகிரி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் காலை 9:30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், அ.தி.மு.க., மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணிகள், அனைத்து தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர், பொது மக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

