/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,475 பேர் கைது
/
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,475 பேர் கைது
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,475 பேர் கைது
தடையை மீறி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,475 பேர் கைது
ADDED : டிச 31, 2024 06:40 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாஜி., அமைச்சர் மற்றும் 2 எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 1,475 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க., ஆட்சியை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு, போலீசார் அனுமதி தரவில்லை. ஆனாலும், தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், மாநில மீனவரணி துணை செயலாளர் தங்கமணி, அவைத்தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம் வர்த்தக பிரிவு வரதராஜன், பகுதி செயலாளர்கள் கந்தன், மாதவன், வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கம் பாலகிருஷ்ணன் மற்றும் 26 பெண்கள் உட்பட 275 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் காந்தி சிலை அருகே, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் பாலக்கரையில் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க., அரசையும், முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார், நிர்வாகிகள் முருகுமணி, மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், அருளழகன், வளர்மதி, ராஜசேகர், செஞ்சி லட்சுமி, இளங்கோவன், பொருளாளர் அய்யாசாமி, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன் உள்ளிட்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடியில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் உள்ளிட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெ., பேரவை துணை செயலாளர் சிவசுப்பரமணியன், தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, ஜெ., பேரவை செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் வடக்குத்து கோவிந்தராஜ், பாஷியம், வடலுார் நகர செயலாளர் பாபு, மற்றும், தொழில்நுட்ப பிரிவு ராதாகிருஷ்ணன், திருமலைவாசன் உள்ளிட்டோர் கைதாகினர்.
கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 1,475 பேர் கைது செய்யப்பட்டனர்.