தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உதவி பெறும் ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

உதவி பெறும் ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்

உதவி பெறும் ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 09, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 06:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட் டமைப்பு சார்பில், கடலுாரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில பொருளாளர் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் வரவேற்றார்.

சமூக சேவகர் விஜய்வளவன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ராமவெங்கடாஜலபதி, கேத்திரின் திரேசா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் களுக்கும் வழங்க வேண்டும். அரசு அனுமதித்த காலிப்பணியிட நியமனங்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், விக்டர் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அமைப்புச் செயலாளர் குழந்தையேசு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us