/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.ஐ.டி.யூ.சி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
ஏ.ஐ.டி.யூ.சி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 09, 2025 02:12 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகராஜ், சந்தர்ராஜா, வடிவேல், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏ.ஐ.டி.யூ.சி.,தேசிய செயலாளர் மூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் துரை, மாவட்டதலைவர் சக்திவேல், மாவட்ட பொதுசெயலாளர் குணசேகரன்,இந்திய கம்யூ., மாநில கட்டுப்பாட்டுக்குழு மணிவாகசகம், விவசாயிகள் சங்க மாவட்டசெயலாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
சம ஊதிய திட்டத்தை மீறி, காண்ட்ராக்ட் அவுட்சோர்ஸிங் முறையை கைவிடு, துாய்மை பணியாளர்களை தனியார்மயம் என்ற பெயரில் சுரண்டலுக்கு உட்படுத்தாதே, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்து என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.