அகல் விளக்குகள் குடோன் தீ விபத்தில் எரிந்து நாசம்
அகல் விளக்குகள் குடோன் தீ விபத்தில் எரிந்து நாசம்
ADDED : பிப் 14, 2026 03:53 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் திடீர் தீ விபத்தில் அகல்விளக்குகள் தயாரிக்கும் குடோன் எரிந்து சேதமடைந்தது.
விருத்தாசலம், நாச்சியார்பேட்டை மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ். அதே பகுதியில் அகல்விளக்குகள் தயாரிக்கும் குடோன் வைத்துள்ளார். நேற்று காலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார். மதியம், 2:00 மணியளவில் குடோன் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய துவங்கியது.
தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், அகல்விளக்குகள், ஆயில் உள்ளிட்ட மூலப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
