/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
/
என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
ADDED : மே 01, 2025 05:15 AM

கடலுார் : கடலுார் லாரன்ஸ் ரோட்டில் உள்ள என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள என்.எஸ்.,மகாவீர் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை நேற்று காலை துவங்கியது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, வாடிக்கையாளர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கடை உரிமையாளர்கள் சுசில்குமார், சும்தி குமார் விற்பனையை துவக்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் கூறுகையில், அரசு உத்தரவுப்படி HUID ஆறு இலக்க முத்திரையுடன் அனைத்து நகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. புத்தம் புது டிசைன்களில், லட்சுமி கடாட்சம் பொருந்திய நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தரமான தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் கிடைக்கிறது. எங்களிடம் நகைகள் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் என்றனர்.
ஏராளமான பொதுமக்கள், நகைகளை தேர்வு செய்து வாங்கிச்சென்றனர்.