ADDED : ஏப் 14, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி,; பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் சுடுகாட்டு பகுதியில் புதுச்சேரி மாநில மதுபானம் விற்பதாக முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சுடுகாட்டு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பேர்பெரியானகுப்பம் ராஜராஜன்,38; என்பவர் புதுச்சேரி மதுபானங்களை விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 61 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.