ADDED : மார் 23, 2026 08:04 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று கம்மாபுரம் டாஸ்மாக் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கம்மாபுரம் மேட்டு தெருவை சேர்ந்த உத்தண்டி என்பவர், கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இதுகுறித்து, கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, உத்தண்டியை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
