ADDED : மே 29, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளஞ்சாவடி எஸ்.எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று சுப்ரமணியபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் மொபெட்டில் சென்ற நபர் ஒருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில் சாக்கு பை ஒன்றில் அரசு மது பாட்டில்களை, சட்ட விரோதமாக விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில், அவர் கோதண்டராமபுரம், புதுக்குளத்தை சேர்ந்த பழனிவேல், 51; என தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து, 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
