UPDATED : அக் 08, 2026 07:25 PM
ADDED : அக் 08, 2026 06:47 PM

அ நிறம் | அளவு
வடலூர்: மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று காலை, அம்பலவாணன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் ஜனா,28; என்பவரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 2,160 மதிப்புள்ள, 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
