ADDED : ஜன 05, 2025 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார், அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் விசு,40; இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 66 மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து விசுவை கைது செய்து, மதுபாட்டில்களையும், மது கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.