/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 21, 2025 11:30 PM
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், 100 நாள் வேலையை 200 நாளாக்கி, நாள் ஒன்றுக்கு ஊதியம் 600 வழங்கிட வலியுறுத்தி மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்டுமன்னார்குடி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் வட்டத் தலைவர் பொன்னம்பலம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் தனபால் துணைத் தலைவர்கள் ராஜேந்திரன் இளங்கோவன்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமராட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் குமராட்சி ஒன்றிய விவசாய சங்க செயலாளர் புஷ்பராஜ், மா.கம்யூ., நகர அமைப்பாளர் மணிகண்டன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ராஜசேகர், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி இளவரசி, செல்வராஜ், ஆனந்த வீரன், நாகப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.