/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து கட்சி கூட்டம்
/
லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து கட்சி கூட்டம்
ADDED : மார் 18, 2024 04:09 AM

கடலுார், : லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த அனைத்து கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகர், எஸ்.பி., ராஜாராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அ.தி.மு.க., சார்பில் அவைத் தலைவர் குமார், இளைஞர் அணி சஞ்சீவி, காங்., மாவட்ட தலைவர் திலகர், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், இந்திய கம்யூ., மாவட்ட துணைத் தலைவர் குளோப், வி.சி., சார்பில், துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் செந்தில், த.வா.க., கவுன்சிலர் அருள்பாபு, தே.மு.தி.க., சரவணன், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு, பிரசாரம் போன்றவை குறித்து காணொலி மூலம் விளக்கப்பட்டது.

