/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம்
/
கடலுார் கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம்
ADDED : ஜன 23, 2024 04:44 AM

கடலுார், : அயோத்தி ராமர் கோவில் கும்பாபி ேஷகத்தையொட்டி, கடலுார் பகுதி கோவில்களில் ஜி.ஆர்.கே.எஸ்டேட் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. அதையொட்டி, கடலுார் கிருஷ்ணாலயா தியேட்டர் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் ஜி.ஆர்.கே.எஸ்டேட் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் துரைராஜ், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதேபோன்று, திருவந்திபுரம் தேவநாதசாமி, திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர், வரதராஜப் பெருமாள், வண்ணாரப்பாளையம் சாந்த ரூப ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார்.
ஏற்பாடுகளை சக்ராலயா மற்றும் சங்காலயா மோட்டார்ஸ் ஊழியர்கள் செய்திருந்தனர்.

