/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 16, 2026 07:10 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
கடலுார் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியம், பேய்கானத்தம், சிவனந்திபுரம், அப்பியம்பேட்டை, கோரணப்பட்டு, சிவநந்திபுரம், கோ-சத்திரம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21, உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பா.ம.க., அ.தி.மு.க., த.வெ.க., உள்ளி ட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர், கமல்ராஜ், ஆனந்தராஜ், சந்திரசேகரன், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21, ஐ சேர்ந்த பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு. க., வில் இணைந்தனர்.
முன்னாள் பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவை தலைவர்கள் வீரராமச்சந்திரன், ராஜா, சாரங்கபாணி, நடராஜன், ராம வெங்கடேசன், ஆடலரசன், கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜனார்த்தனன், மோகன், சடையப்பன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி செயலாளர் ஸ்டாலின், லோகநாதன், தனசேகர், பொன்னம்பலம், வழக்கறிஞர் ஹரிதாஸ், சந்திரசேகரன், அண்ணாது ரை, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

