ADDED : டிச 29, 2025 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மாலில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1995ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவிகள், தொழிலதிபர்கள், டாக்டர்கள் என, பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இம்மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி செயின்ட் மேரீஸ் பள்ளி மற்றும் வி ஸ்கொயர் மாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் மாணவியான வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவிகள் பலரும், தங்களின் கடந்த கால பள்ளி நினைவுகள், ஆசிரியர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

