தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மார் 05, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: சிதம்பரம், அண்ணாமலை நகரில் உள்ள முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த, 1988-1991ம் ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா, குறிஞ்சிப்பாடி அடுத்த பெரிய கண்ணாடி கிராமத்தில் நடந்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் மற்றும், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்களை பொன்மொழி வரவேற்றார்.

சென்னை போலீஸ் தலைமை அலுவலகத்தில் காவல்துறை தலைவருக்கு நேர்முக உதவியாளராக பணியாற்றும் சரவணபெருமாள் ஒருங்கிணைத்தார். விழா நிகழ்வுகளை திலகவதி, ஜெயந்தி தொகுத்து வழங்கினர். நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ராஜன் பாபு, ஸ்ரீராம தேசிகன், சந்திரசேகர், மீனாட்சி சுந்தரேஸ்வரன் அன்பளிப்பு வழங்கினர்.

பண்ருட்டி, அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் இயந்திரவியல் துறை தலைவர் கிருபாநதி உட்பட மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

என்.எல்.சி., அதிகாரி ஆனந்த பிரசாத் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பொன்மொழி, பொறியாளர் அருள் செல்வம், தொழிலதிபர் ராஜன் பாபு, என்.எல்.சி., அதிகாரிகள் வாசுதேவன், அன்பழகன் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us