ADDED : ஆக 15, 2026 09:41 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் சாலை கனகதாரன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி சாலை அஞ்சனா, மாணவர் சாலை அருளமுதன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் புனிதவள்ளி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து பள்ளியில் 1999 முதல் 2025 ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ,மாணவிகள் தங்களது கல்வி மற்றும் பணி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். முன்னாள் மாணவர்கள் 500 பேருக்கு மேல் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
