/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
/
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
ADDED : ஜன 07, 2025 12:15 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் 1990 - 93ம் ஆண்டு இளநிலை கணித துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கணித துறை தலைவர் பாலசங்கு, முன்னாள் மாணவ மாணவிகள் சங்க செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கணித துறை மாணவர் முருகன் வரவேற்றார்.
முன்னாள் கணித துறை தலைவர்கள் வரதராஜன், பக்கிரிசாமி, ஜெயந்தி, ராமச்சந்திரன் மற்றும் பேராசிரியை ஆனந்த கனகஜோதி, பேராசிரியர் திருநாவுக்கரசு பேசினர்.
இதில், முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்லுாரி நினைவுகளை பகிரிந்து கொண்டனர். முன்னாள் மாணவர், கவுரவ விரிவுரையாளர் கதிர்வேல் விழாவை ஒருங்கிணைத்தார்.
முன்னாள் கணித துறை மாணவர், சப் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா நன்றி கூறினார்.

