ADDED : ஏப் 14, 2026 05:23 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, விருத்தாசலத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் அருளழகன், ரவிச்சந்திரன், மணிவண்ணன், தங்கராசு, முக்தார்அலி, வேங்கடவேணு, அண்ணாமலை, சவுந்தரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய குடியரசு கட்சி சார்பில் நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை மாலை அணிவித்தார். ஒன்றிய தலைவர் ஜெயசீலன், இளைஞரணி செயலாளர் அலிபாபு, பொருளாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
