/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.ம.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
/
அ.ம.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜன 04, 2025 05:54 AM

கடலுார்; கடலுாரில் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி, நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி பேசினர். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சத்தியராஜ், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அன்வர்பாஷா, சக்திவேல், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், சேதுராமன், பிரவீன்குமார், கஜேந்திரன், பகுதி செயலாளர் தீபா, காதர், சம்பத், சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத கடலுார் மாநகராட்சியை கண்டிப்பது. கடலுார் புதிய பஸ் நிலையம் கடலுார் தொகுதியில் மட்டுமே அமைய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கருணாநிதி நன்றி கூறினார்.

