ADDED : ஜன 10, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடியில் அ.ம.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி, மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜாபழனிவேல், மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், கட்சி வளர்ச்சி பணிகள், கிராமங்களில் கிளைகள் அமைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.