அ.ம.மு.க., நிர்வாகிகள் கூட்டம் ;முருகுமாறன் ஆலோசனை
அ.ம.மு.க., நிர்வாகிகள் கூட்டம் ;முருகுமாறன் ஆலோசனை
ADDED : ஏப் 05, 2026 05:55 PM

ராமநத்தம்: திட்டக்குடி தொகுதி அ.ம.மு.க., நிர்வாகிகளை அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார்.
திட்டக்குடி தொகுதி அ.ம.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோட்டில் நடந்தது.
அ.ம.மு.க., மாவட்ட செயலர் முருகேசன் தலைமை தாங்கினார். அ.ம.மு.க., திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர்கள் ஜெயவேல், உதயாதித்யன், அ.தி.மு.க., வர்த்தகரணி மாநில துணைச்செயலர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் பங்கேற்று, தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்கான ஆதரவு கேட்டு, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
அப்போது, அ.ம.மு.க., ஒன்றிய செயலர்கள் பழனிவேல், முருகன், ஷாஜகான், கார்த்தி, ராமச்சந்திரன், உதயசூரியன், அய்யப்பன், அ.தி.மு.க., வர்த்தகரணி மாவட்ட செயலர் அருள், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலர் முத்தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.
