ADDED : செப் 19, 2024 11:38 PM

கடலுார்: கடலுார் புதுப்பாளையத்தில் அ.ம.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.பகுதி செயலாளர்கள் தீபா, காதர் ஷெரீப், சம்பத் வரவேற்றனர். மாவட்ட நிர்வாகிகள் வேல்முருகன், கல்யாணராமன், ஒன்றிய செயலாளர்கள்
அன்வர்பாஷா, சக்திவேல், சேதுராமன், மதியழகன், ராதாகிருஷ்ணன், நகர செயலாளர்கள் பிரவீன் குமார், கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கட்சியின் துணை தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் சிறப்புரையாற்றினார்.
அப்போது, புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் முருகன், மாநில நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சிவகுமார், மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், முருகன், அருள்செல்வன், கருணாநிதி, கணேசன், வாசுகி, ராஜேந்திரன், சையது முஸ்தஃபா, மணிவண்ணன், சிவகாமி, ரமேஷ், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வட்ட செயலாளர் இளையராஜா நன்றி கூறினார்.