/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.ம.மு.க., கட்சியினர் அ.தி.மு.க., வில் ஐக்கியம்
/
அ.ம.மு.க., கட்சியினர் அ.தி.மு.க., வில் ஐக்கியம்
ADDED : அக் 01, 2024 06:47 AM

சிதம்பரம்: அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர், சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் முன்னிலையில், அ.ம.மு.க., கட்சியில் இருந்து விலகிய 25 பேர் அ.தி.மு.க., வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் அ.ம.மு.க., அண்ணாமலை நகர் ஒன்றிய அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில், நிரவாகிகள் தேவராஜ், மதி, குருபாலன், அருண்ராஜ், ரிஸ்வான், சரவணன், தட்சிணாமூர்த்தி, ராஜா, சுகுன்ராஜ், ஆனந்த், வீரமணி, குமார், சந்திரமோகன், ஆனந்தன் உள்ளிட்ட 25 பேர் தங்களை, அ.தி.மு.க., வில் இணைத்துக்கொண்டனர்.
அப்போது, அ.தி,மு.க., பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் அசோகன், குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள். ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரெங்கசாமி, பொருளாளர் சுந்தரம் நிர்வாகிகள் தச்சக்காடு மகேஷ், செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.