ADDED : பிப் 13, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே அடையாளம் தெரியாத முதியவர் விபத்தில் உயிரிழந்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை கிராமம் அருகே, 70 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றார்.
அந்த வழியாக வேகமாக வந்த ஸ்கூட்டர் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊர் என, தெரியவில்லை.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.