ADDED : ஏப் 11, 2026 10:19 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க., தலைவர் அன்புமணி,ஏப்ரல் 12, 13 பிரசாரம் செய்கிறார். இதன்படி, பண்ருட்டியில் (12ம் தேதி) மாலை 4:00 மணிக்கும், நெய்வேலி தொகுதி முத்தாண்டிக்குப்பத்தில் மாலை 5:30 மணி, விருத்தாசலத்தில் இரவு 7:00 மணி, குறிஞ்சிப்பாடி தொகுதி குள்ளஞ்சாவடியில் இரவு 8:00 மணிக்கும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து (13ம் தேதி) கடலுாரில் மாலை 4:00 மணிக்கும், காட்டுமன்னார்கோவிலில் மாலை 6:00 மணிக்கு, சிதம்பரத்தில் இரவு 7:00 மணிக்கும், புவனகிரியில் இரவு 8:00 மணிக்கு, வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
